ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பள்ளி கொண்டா அருகே லாரி மீது பஸ்கள் மோதல்:  3 பேர் சாவு - 38 பேர் காயம்

ஒசூரிலிருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பள்ளிகொண்டா அடுத்த காளப்புதூர் அருகே சென்றபோது மணல் லோடு ஏற்றிக் கொண்டு முன்னாள் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது அரசு பஸ் மோதியுள்ளது.  அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  அதைத் தொடர்ந்து

Updated On :7 டிசம்பர் 2014, 12:13 pm

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த விபத்தில் டிப்பர் லாரி மீது அரசு பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியில் 3 பேர் இறந்தனர்.  38 பேர் காயமடைந்தனர்.

ஒசூரிலிருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பள்ளிகொண்டா அடுத்த காளப்புதூர் அருகே சென்றபோது மணல் லோடு ஏற்றிக் கொண்டு முன்னாள் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது அரசு பஸ் மோதியுள்ளது.  அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  அதைத் தொடர்ந்து பஸ்ஸிலிருந்த பயணிகள் கீழே இறங்கினர்.  பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பெங்களூரிலிருந்து வேலூர் நோக்கி சென்ற மற்றொரு அரசு பஸ் நின்று கொண்டிருந்த பஸ் மீது மோதியுள்ளது. 

அந்த விபத்தில் பெங்களூர் பொம்மனஹல்லியை சேர்ந்த ரங்கநாதன் மனைவி மல்லிகா (40) சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மல்லிகாவின் கணவர் ரங்கநாதன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.  மேலும் செய்யாறு அடுத்த மேல்சீசமங்களம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் அபிதா (40) என்ற சிறுமி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இரு பஸ்களிலும் பயணம் செய்த மொத்தம் 38 பயணிகள் காயமடைந்தனர்.  விபத்து நடந்தபோது அருகில் இருந்த பொதுமக்கள்  பள்ளிகொண்டா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.   காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  பிறகு பள்ளிகொண்டா போலீஸாஆர் போக்குவரத்தை சீர் செய்தனர்.

விபத்தில் சிக்கி காயமடைந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா. நந்தகோபால் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.