பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம்

இது தொடர்பாக ஆர்.வராகி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: குஜராத் மாநில முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான

News image
Updated On :22 ஏப்ரல் 2014, 2:43 pm

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 இது தொடர்பாக ஆர்.வராகி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: குஜராத் மாநில முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, குஜராத்தில் உள்ள வதோதரா மற்றும் வாரணாசி ஆகிய தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது மனைவியின் பெயர் ஜúஸôதாபென் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 ஆனால், குஜராத் சட்டசபைத் தேர்தலில் கடந்த 2002, 2007 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் போட்டியிடும் போது மனைவி என்ற பகுதியை வெற்றிடமாக விட்டிருந்தார்.

 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்த தேர்தல் வேட்பு மனுவில் அது போன்ற எந்தத் தகவலையும் மோடி வெளிப்படுத்தவில்லை.

 மேலும், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில், அவரது மனைவி ஜúஸôதாபென்னின் வருமானம் குறித்து எந்தத் தகவல்களையும் குறிப்பிடவில்லை. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி குற்றமாகும்.

 எனவே, தவறாக வேட்புமனுத் தாக்கல் செய்த நரேந்திர மோடிக்கு எதிராக, குற்றவியல் நடவடிக்கை உள்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

 இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (ஏப்.22) விசாரணைக்கு வந்தது.

 மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. மேலும், தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்த அடுத்த நாளே மனுதாரர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  இதைப் பார்க்கும் போது, இந்த மனுவை ஊக்குவிப்பதற்கான எந்த காரணமும் நாங்கள் கண்டறியவில்லை எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.