பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏப்ரல் 12 முதல் 15-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.
வரும் 13-ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோயில்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தச் செல்வது வழக்கம். இதையொட்டி சேலம் கோட்டம் சார்பில் பழனி, கொடுமுடி, வடசென்னிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலத்திலிருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக பழனிக்கும், நாமக்கலில் இருந்து கொடுமுடி வழியாக பழனிக்கும், சேலத்திலிருந்து ஆத்தூர் வழியாக வடசென்னிமலைக்கும்,
கள்ளக்குறிச்சியிலிருந்து வடசென்னிமலைக்கும், தருமபுரியிலிருந்து பழனிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் வரும் 14-ம் தேதி பெüர்ணமியை முன்னிட்டு சேலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எனவே பயணிகள் அனைவரும் நெரிசலைத் தவிர்த்து பயணம் செய்திடும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மும்பை பந்துவீச, சிஎஸ்கே பேட்டிங்: இந்தப் போட்டியிலும் தோனி இல்லை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

