விதிமுறை மீறி கருந்திரி தயார் செய்ததாக 5 பேர் கைது
விருதுநகர் அருகே விதிமுறை மீறி அனுமதியில்லாமல் குடியிருப்புகளுக்கு அருகே கருந்திரி தயார் செய்ததாக 5 பேரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர். அதோடு, 40 கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து


விருதுநகர் அருகே விதிமுறை மீறி அனுமதியில்லாமல் குடியிருப்புகளுக்கு அருகே கருந்திரி தயார் செய்ததாக 5 பேரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர். அதோடு, 40 கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரம், ஒண்டிப்புலிநாயக்கனூர், டி.சேடபட்டி, ஓ.கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயார் செய்து வருவதாக வருவாய் துறை மற்றும் போலீஸார் ஆகியோருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர் வெண்ணிலா உள்ளிட்ட போலீஸார் திடீர் ரெய்டு சென்றனர். இதில் ஒண்டிப்புலிநாயக்கனூரில் கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம்(40), ரத்தினம்(35) சுற்றி வளைத்து பிடித்தனர்.
அதேபோல், சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த சதாசிவம், ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த பிச்சைமணி(30), டி.சேடபட்டியைச் சேர்ந்த ராஜக்கனி(35) உள்ளிட்ட 5 பேர் மீதும் கிராம நிர்வாக அலுவலர் வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், விதிமுறை மீறி தயார் செய்த பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் 40 குரோஸ் கருந்திரி கட்டுக்களையும் பறிமுதல் செய்தும் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...