எனவே இச்செயலைக் கண்டித்து அப்பகுதியின் நகராட்சி உறுப்பினர் ஆரோக்கியராஜ் தலைமையில் பொதுமக்கள் திரண்டு வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அங்கு ஆணையாளர்(பொறுப்பு) மற்றும் தலைவர் உள்ளிட்டோர் இல்லாததால், நேரடியாக இளநிலை பொறியாளர் தனசேகரனிடம் சென்று புகார் செய்தனர். ஏற்கனவே இது தொடர்பாக நகராட்சி கூட்டத்திலும் பேசியுள்ளேன். ஆனால், எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்து வருகின்றனர். மேலும், குடிநீர் விநியோகம் இல்லாத நாள்களில் வெளியிலிருந்து டிராக்டர்களில் வரும் ஒரு குடம் குடிநீரை ரூ.10-க்கு வாங்க வேண்டியிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். ஏற்கனவே நகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மட்டும் குடி தண்ணீர் விநியோகம் செய்து வருவதாகவும், அதிலும் கழிவு நீர் கலப்பதால் மிகவும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதை தடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களை கேட்டுக் கொண்டனர்.