/

விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் பூட்டியிருந்த வீட்டை திறந்து நகை, ரொக்கம் திருட்டு

விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை ஆமத்தூர் போலீஸார் விசாரணை செய்து

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:54 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை ஆமத்தூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி தனலட்சுமி(36). இவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலையில் வழக்கம் போல் வீட்டைப் பூட்டி விட்டு சாவியை, விடுமுறை என்பதால்  பிள்ளைகளிடம் கொடுத்துச் சென்றார்களாம். பின்னர் மதிய உணவுக்காக தனலட்சுமி மட்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.அப்போது, வீட்டுக் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, உள்ளே சென்று பார்க்கையில் பீரோவை உடைத்து உள்ளேயிருந்த ரொக்கம் ரூ.26500 மற்றும் கம்மல், வெள்ளிக்கொலுசு ஆகியவைகளை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றது.தெரியவந்தது. உடனே இது தொடர்பாக தனலட்சுமி ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து  வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: விருதுநகர் அருகே தவசிலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமியின் மகன் பழனி(31). இவர் கிராமத்திற்கு அருகில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் செவ்வாய்கிழமை காலையில் வீட்டில் பிள்ளைகள் இருப்பதால் வீட்டை பூட்டாமல் வேலைக்குச் சென்றுள்ளனர். பின்னர் ஆடுகளுக்கு இரை வைப்பதற்காகவும், மதிய உணவுக்காகவும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டில் பிள்ளைகள் இல்லாத நிலையில் திறந்து கிடந்ததுள்ளது.பின்னர் உள்ளே சென்று பார்க்கும் போது பீரோவை கடப்பாறையால் நெம்பி உள்ளேயிருந்த 4 சவரன் தங்கம், வெள்ளிக்கொலுசு மற்றும் ரொக்கம் ரூ.5300 ஆகியவைகள் மர்ம நபர்களால் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் பழனி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.