இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை காமராஜர் பல்கலை கழக ஆட்சி மன்ற பேரவைக்குழு உறுப்பினராக விருதுநகர் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி தலைவர்களில் ஒருவரை தேர்தல் நடத்தி தேர்வு செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட நாளில் தொடங்கி, அக்.4ம் தேதி வரையில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும். அதையடுத்து, அக்.4ம் தேதி மாலை 4 மணிக்கு வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த மனுக்களை வருகிற அக்.10ம் தேதி 3 மணிக்குள் திரும்ப பெற வேண்டும்.