/

தடையுத்தரவு போட்டது நியாயமான நடவடிக்கை அல்ல: பசும்பொன்னில் மு.க.ஸ்டாலின்

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நேரத்தில் தடையுத்தரவு போட்டது சரியான நடவடிக்கை அல்ல என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:32 pm

ஜெயப்பாண்டி

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நேரத்தில் தடையுத்தரவு போட்டது சரியான நடவடிக்கை அல்ல என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்திருந்த  அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவானவர். அவர் சமுதாய ஒற்றுமைக்கு பாடுபட்டவர். அவரை குறுகிய எல்லையில் அடக்கக் கூடாது.

தேவர் ஜெயந்தி நேரத்தில் இங்கே 144 தடையுத்தரவு போடப்பட்டது சரியான நடவடிக்கை அல்ல.

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் மட்டுமல்ல; பொதுவாகவே எழுதவோ பேசவோ இயலாத படி, கருத்து சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. இது சரியான நடைமுறை அல்ல. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றார் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின் வந்து சென்ற நேரத்தில், ராமநாதபுரம் தொகுதி நடிகர் ரித்திஷ் தனி அணியாக வந்து சென்றதாக எழுந்த பேச்சால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.