/

காங்கிரஸ் அரசை வீழ்த்துவதே முதல் நோக்கம்: பசும்பொன்னில் வைகோ

பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்கத் தேவரின் 106வது பிறந்த நாள் மற்றும் 51வது குருபூஜை விழாவில் 2ம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்தார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:32 pm

ஜெயப்பாண்டி

பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்கத் தேவரின் 106வது பிறந்த நாள் மற்றும் 51வது குருபூஜை விழாவில் 2ம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசியபோது, இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறது காங்கிரஸ் அரசு. சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் காங்கிரஸை கடைசி வரை எதிர்த்தார். அவர் இன்று இருந்திருந்தால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டிருப்பார்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தி போர்க்குற்றவாளி ராஜபட்சவுக்கு அங்கீகாரம் அளிப்பது ஒன்றே மத்தியில் ஆளும் காங்கிரஸின் நோக்கமாக உள்ளது. எனவே, காங்கிரஸ் அரசை வீழ்த்துவதே முதல் நோக்கம் என்றார்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் மொட்டை அடித்து வழிபாடு செய்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.