மதுரை அதிமுக பிரமுகருக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ வாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த ஏ.கே.போஸ்.இவரது வீடு ஜீவா நகரில் உள்ளது. இந்நிலையில் ஜெய்ஹிந்த் புரம் மாநகர காவல் நிலையத்துக்கு ஒரு கடிதம்


மதுரை வடக்கு தொகுதி அதிமுக உறுப்பினராக இருப்பவர் ஏ.கே.போஸ். இவரது வீடு ஜீவா நகரில் உள்ளது. இந்நிலையில் ஜெய்ஹிந்த் புரம் காவல் நிலையத்திற்கும், மாநகர காவல் நிலையத்துக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தூரில் வெடிகுண்டு வைத்திருந்ததாக போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதற்கு பதிலடியாக முதல்வரிடம் தனி மரியாதை பெற்ற ஏ.கே.போஸ் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து செவ்வாய்கிழமை போஸ் வீடு மற்றும் டிராவல்ஸ் அலுவலகம் ஆகிய இடங்களில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.மேலும் போஸ் வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டது. போலீஸாருக்கு வந்த கடிதத்தில் இப்படிக்கு நெல்பேட்டை பன்னா எனக் குறிபிடப்படிருந்தது.ஏற்கெனவே நெல்பேட்டையைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என கூறியிருந்த நிலையில் இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...