நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சென்னை எழும்பூர் விரைவு ரயிலை கரூர் வரை நீட்டிக்க பாஜக கோரிக்கை

நாமக்கல் ரயில்நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வந்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ்மிஸ்ராவை அக்கட்சியின் மாவட்ட பொதுச்செயலர் எம்.சம்பத்குமார் உள்பட கட்சி

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:13 pm

தமிழ்ச்செல்வன்

சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயிலை கரூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

நாமக்கல் ரயில்நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வந்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ்மிஸ்ராவை அக்கட்சியின் மாவட்ட பொதுச்செயலர் எம்.சம்பத்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். அதில், சென்னை எழும்பூரிலிருந்து சேலம் வரை வந்துசெல்லும் விரைவு ரயிலை பொதுமக்கள் நலன்கருதி நாமக்கல் வழியாக கரூர் வரை நீட்டிப்பு செய்து இயக்கிட வேண்டும். இதன்மூலம், நாமக்கல் மாவட்டம், கரூர் மாவட்ட மக்கள் கூடுதலாக பயன்பெற முடியும்.மேலும், ரயில் பாதைகளை கடப்பதால் ஆபத்து ஏற்படுவதற்கு முன் சேலம் - கரூர் அகல ரயில்பாதையில் அனைத்து லெவல் கிராஸிங்குகளிலும் கேட் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கையை ஏற்ற ராகேஷ்மிஸ்ரா, இதன்மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.