நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விற்பனை தொகை மோசடி: டாஸ்மாக் ஊழியர் இருவர் கைது

நாமக்கல் மகாத்மாகாந்திநகரைச் சேர்ந்த ராமசாமியின் மகன் தமிழ்ச்செல்வன்(40) நாமக்கல் சேலம் சாலையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர். அதே கடையில் விற்பனையாளராக

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:12 pm

தமிழ்ச்செல்வன்

விற்பனை தொகையை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்ததாக நாமக்கல்லில் டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மகாத்மாகாந்திநகரைச் சேர்ந்த ராமசாமியின் மகன் தமிழ்ச்செல்வன்(40) நாமக்கல் சேலம் சாலையிலுள்ள டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர். அதே கடையில் விற்பனையாளராக பணியாற்றுபவர் ராசிபுரத்தைச் சேர்ந்த வரதனின் மகன் முருகேசன்(36). அக்கடையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முகராஜா, ஏடிஎஸ்பி (கலால்) பெரியசாமி ஆகியோர் வியாழக்கிழமை இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 9-ம்தேதி மதுக்கள் விற்பனை செய்யப்பட்ட தொகை ரூ.1,60,070ஐ வங்கியில் செலுத்தாமல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின்போதும் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததை அடுத்து தமிழ்ச்செல்வன், முருகேசன் ஆகிய இருவர் மீதும் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.1,60,070 தொகையையும் மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.