இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தேவனூர்நாட்டைச் சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் மனோகரன்(37) கட்டுமான தொழிலாளி. இவர் கடந்த 2010 ஜனவரி 20-ம் தேதி மோகனூரில் வேலை முடித்துவிட்டு


விபத்தில் இழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் கும்பகோணம் கோட்ட அரசு பேருந்து நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தேவனூர்நாட்டைச் சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் மனோகரன்(37) கட்டுமான தொழிலாளி. இவர் கடந்த 2010 ஜனவரி 20-ம் தேதி மோகனூரில் வேலை முடித்துவிட்டு கும்பகோணம் கோட்ட அரசு பேருந்தில் நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். வழியில் சாலை தடுப்பில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மனோகரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட மனோகரனின் மனைவி பழனியம்மாள் இழப்பீடு கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மனோகரனின் குடும்பத்துக்கு ரூ.6.46 லட்சம் இழப்பீடு வழங்கிட கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டு கடந்த 2012 ஏப்ரல் 23-ம் தேதி தீர்ப்பளித்தது. உரிய காலத்தில் இழப்பீடு தொகை வழங்கப்படாததால் பழனியம்மாள், நிறைவேற்றும் மனுத்தாக்கல் செய்தார்.
அதன்மீது விசாரணை மேற்கொணட நீதிபதி ராமதிலகம், கும்பகோணம் அரசு கோட்ட பேருந்தை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட மனோகரனின் குடும்பத்துக்கு அபராதம் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.8 லட்சம் வழங்கிட உத்தரவிட்டது. இதனடிப்படையில், சேலத்திலிருந்து திருச்சி செல்ல நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த கும்பகோணம் கோட்ட அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதனால், பேருந்து நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...