பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வரதட்சனைக் கொடுமையில் மனைவி தற்கொலை:கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

வரதட்சணைக் கொடுமை செய்து மனைவியை தற்கொலை செய்யத் தூண்டிய கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Updated On :1 அக்டோபர் 2013, 4:20 pm

வரதட்சணைக் கொடுமை செய்து மனைவியை தற்கொலை செய்யத் தூண்டிய கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிதம்பரம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த பக்கிரிசாமி, மனோன்மணி இவர்களின் மகள் மஞ்சுளா. இவருக்கும் சென்னை தாண்டவன் நகரைச் சேர்ந்த பெருமாள், மகேஸ்வரியின் மகன் உதயகுமாருக்கும் 2009- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு 12 சவரன் நகையும், ரூ. 30 ஆயிரம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுப்பதற்கு மஞ்சுளாவின் பெற்றோர் சம்மதித்துள்னர். ஆனால், திருமணத்தின் போது 7 சவரன் நகை மட்டும் கொடுத்துள்ளனர்.

மீதம் உள்ள 5 சவரன் நகையைக் கேட்டு உதயகுமார் மஞ்சுளாவை கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்தது வந்தது. இதில், கொடுமை தாங்காத மஞ்சுளா மனம் உடைந்து 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உதயகுமார் மற்றும் அவரின் பெற்றோர் மீது வரதட்சணை கொடுமை உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை மகளிர் நீதிமன்ற நீதிபதி மீனாசதீஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் கெüரிஅசோகன் ஆஜரானார். வழக்கின் இறுதியில் உதயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மகேஸ்வரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் சேர்த்து ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.