ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பணிகளில் வருவாய்த்துறை, இதர துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் 36 கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. இதன்காரணமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை வாக்காளர்களுக்கு வினியோகிக்க கொண்டு செல்லப்பட்ட ரூ.1,45,49,910 ரூபாயும், தங்கம், வெள்ளி உள்பட ரூ.2,89,90,000 மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் தீவிரமாக தணிக்கை செய்யப்படுகிறது.