சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக வீரர் ஒருவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய உள்துறைச் செயலர் (சுதந்திரப் போராட்ட வீரர்கள்கள் பிரிவு) நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருவாரூர் மாவட்டம் சோலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் எம்.ராஜகேபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: கடந்த 1973-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வுதியம் எனக்கு வழங்குவதற்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன் பேரில் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ஒரு ஆண்டுக்கு மேலாக காலாவதியாகி விட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தாடெர்ந்த போது, காலாவதியான ஓய்வூதியத்தை திரும்ப வழங்க வேண்டும் என, கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டு கடந்த பிறகும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி என்.பால் வசந்தகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு வழக்குரைஞர் ஆஜராகி, நீதிóமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஓய்வூதியம் வழங்குவதற்கு எந்த தடையும் வழங்கவில்லை என வாதாடினார்.
விசாரணையைத் தொடர்ந்து, நவம்பர் 14-ஆம் தேதிக்குள் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நவம்பர் 15-ஆம் தேதி மத்திய உள்துறைச் செயலர் மற்றும் துணைச் செயலர் (சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரிவு) இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆஜராகவில்லை என்றால் பிடிஆணை (வாரன்ட்) பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

