/

கஞ்சா கடத்திய 4 பேர் கைது

மதுரை அருகே கஞ்சா கடத்தல் தொடர்பாக 4 பேரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 26 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள் கைப்பற்றப்பட்டன.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:42 pm

ஜெயப்பாண்டி

மதுரை அருகே கஞ்சா கடத்தல் தொடர்பாக 4 பேரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 26 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள் கைப்பற்றப்பட்டன.

கருப்பாயூரணி போலீஸார் நான்குவழிச்சாலை-வண்டியூர் சாலை சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு கார்கள் அங்கு வந்தன. அவற்றை சோதனையிட்டபோது அதில் ஒரு காரில் சாக்குப் பைகளில் கஞ்சா வைத்து கடத்திவருவது தெரியவந்தது. சுமார் 26 கிலோ மதிப்புடைய கஞ்சாவை போலீஸார் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.2.37 லட்சம் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

கஞ்சாவைக் கடத்தியதாக சக்கிமங்கலம் சதீஷ் (30), ஒத்தங்குடி தர்மராஜ் என்ற தர்மா (19), தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த குபேந்திரன் (28), கூடல்நகப் பகுதியைச் சேர்ந்த செல்வப்பெருமாள் (19) ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து கார்களும், பணம் மற்றும் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.கடந்த பல மாதங்களுக்கு முன்பு கருப்பாயூரணி போலீஸ் நிலையப் பகுதியில் கஞ்சா விற்கும் போட்டியில், இளைஞர் ஒருவர் தெப்பக்குளம் பகுதி டாஸ்மாக் கடை முன்பு கொல்லப்பட்டார். அப்போது புகார் அளித்த நிலையில் கஞ்சா வியாபாரிகள் இளைஞரைக் கொன்றதாக புகார் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.