நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கொசவம்பட்டி ஏரியை சுற்றுலாதலமாக்க நடவடிக்கை : நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் நகராட்சிப் பகுதியிலுள்ள கொசவம்பட்டி ஏரியை தூர்வாரி சுற்றுலா தலமாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:34 pm

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் நகராட்சிப் பகுதியிலுள்ள கொசவம்பட்டி ஏரியை தூர்வாரி சுற்றுலா தலமாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையையொட்டி நாமக்கல் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு சீருடை வழங்கும் விழா நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடந்தது. விழாவுக்கு ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து 140 பேருக்கு சீருடைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியது: தமிழகத்திலேயே முதன்முதலாக இணையதளம் மூலம் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கும் பணி நாமக்கல் நகராட்சியில் நடைபெற்று வருகிறது. இந்நகராட்சியில் ரூ.22.95 கோடியில் பாதாள சாக்கடைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.177 லட்சத்தில் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சாலை பணிகளும், ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.413 லட்சத்தில் அடிப்படை பணிகளும் செய்யப்பட்டுள்ளன. தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சத்தில் செலம்பகவுண்டர் பூங்கா அமைத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குறியது.

இதன்தொடர்ச்சியாக, கொசவம்பட்டி ஏரியை தூர்வாரி அங்கு நவீன பூங்காவுடன் கூடிய சுற்றுலா தலம் ஏற்படுத்திடவும், கமலாயகுளம் மாசுபடுவதைத் தடுக்க ரூ.15 லட்சத்தில் கொசவம்பட்டி ஏரி பகுதியில் சலவைத்துறை அமைக்கவும்  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, நகரின் வளர்ச்சிக்காக நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்புக்குறியது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.