நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நீர்வள நிலவளத் திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு வெளி மாநில பட்டறிவு பயணம்

வேளாண் உற்பத்தி திறனையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், பாசன மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு எளிதாக கிடைக்கச் செய்ய வேண்டும்.அதோடு, ஒவ்வொரு துளி

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:58 am

எஸ். பாண்டியன்

நீர்வள நிலவளத்திட்டத்தின் சார்பில் விவசாயிகள் பயனடையும் வகையில் வெளிமாநிலத்திற்கு பட்டறிவு பயணமாக விருதுநகர் மாவட்ட  வேளாண்மைத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இது குறித்து உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சு.செண்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

வேளாண் உற்பத்தி திறனையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், பாசன மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு எளிதாக கிடைக்கச் செய்ய வேண்டும்.அதோடு, ஒவ்வொரு துளி நீரிலும் அதிக வருமானம் எனும் குறிக்கோளோடு பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து உலக வங்கி நிதியுதவியுடன் நீர்வள, நிலவளத்திட்டம் மும்முரமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் நோக்கம் வேளாண்மையை தீவிரப்படுத்துவதோடு, மாற்றுப்பயிர் செய்தல், உபவடி நிலங்களில் பாசன அமைப்புகளைக் கொண்டு பாசனப்பரப்பையும் அதிகப்படுத்துவது ஆகும். இது போன்ற நடவடிக்கைகளால் வேளாண் உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் 15 உபவடி நீர்ப்பகுதிகளில் நீர்வள நிலவளத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 9 உபவடி நீர்ப்பகுதிகளைச் சேர்ந்த 23 விவசாயிகளை தேர்வு செய்து வெளிமாநில பட்டறிவு பயணமாக ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள சோளம், நெல், எண்ணெய் வித்துக்கள் மற்றும் மானாவாரி பயிர்களுக்கான பன்னாட்டு ஆராய்ச்சி நிலையம் ஆகியவைகளுக்கு நேரில் அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல், அங்கு விவசாயத்திற்காக அமைக்கப்பட்டுள்ள நீர் மேலாண்மை, பயிர் மேலாண்மை, பண்ணைக்குட்டைகள் அமைப்பதன் அவசியம் குறித்து நேரில் பார்த்து, விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.

அதேபோல், அங்கு மேற்கொள்ளப்படும் நெல், சோளம் மற்றும் மானாவாரி பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், உயர் விளைச்சல் ரகங்கள், எண்ணெ வித்து பயிரான சூரியகாந்தி, ஆமணக்கு போன்றவைகளின் உயர் விளைச்சல் ரகங்கள் குறித்தும் நேரி்ல் பார்வையிட்டனர். பின்னர் அங்கு நவீன வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு, பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் அங்குள்ள அனுபவ விவசாயிகள் விரிவாகவும், விளக்கமாகவும் நடைமுறை கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.இந்த பட்டறிவு பயணத்தில் பங்கேற்ற விவசாயிகள் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களில் நடந்து வரும் ஆராய்ச்சிகள் மற்றும் செயல் விளங்ககங்களை நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டதோடு, நவீன விவசாயம் செய்யும் முறையின்  தொழில்நுட்பங்களோடு பயிர் சாகுபடியில் வருங்காலங்களில் பயன்படுத்துவது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்குமென விவசாயிகள் கருத்து தெரிவித்தனர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.