நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பிரபாகரன் படத்துடன் போஸ்டர்கள்: கடலூரில் நாம் தமிழர் கட்சிக் கூட்டத்துக்கு தடை

கடலூரில் இன்று நடைபெறவிருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதித்துள்ளதாக மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:48 am

பெ. விஜயபாஸ்கர்

கடலூரில் இன்று நடைபெறவிருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதித்துள்ளதாக மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் என்ற பெயரில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள மஞ்சை நகர் திடல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படங்களுடன் சீமான் படங்களும் அச்சிடப்பட்டு, பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தன.

தடைசெய்யப்பட்ட இயக்கத் தலைவர் படத்துடன் போஸ்டர்கள் ஒட்ட ஏற்கெனவே அரசாணை உள்ள நிலையில், இது குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படங்களை நாம் தமிழர் கட்சியினர் நீக்கவில்லை. எனவே, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிப்பதாக மாவட்ட எஸ்பி ராதிகா அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திலீபன் வீட்டுக்குச் சென்று போலீஸார் இன்று அதிகாலை 3 மணி அளவில் அளிக்கச் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாத நிலையில், அவர் வீட்டின் கதவில் இந்த அறிவிப்பை ஒட்டிவிட்டு வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.