விருதுநகர் அருகே ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் அழகம்மாள்(23). இதே பகுதியைச் சேர்ந்த அப்பனசாமி என்பவரின் மகன் கருப்பாமி(23). இவர்கள் இருவரும் கடந்த 6 மாத காலமாக நெருங்கி பழகியுள்ளனர். அதோடு, பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் கருப்பசாமியின் குடும்பத்தினர் வசதியான பெண்ணை திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு செய்து வந்தனர். இதையறிந்த, அழகம்மாள் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார். அதற்கு கருப்பசாமி திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்காதலும், அதிக நகை மற்றும் பணம் தருகிற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறி மறுத்துள்ளார்.அதோடு, தகாத வார்த்தைகள் பேசியதோடு, எனக்கு தொல்லை கொடுத்தால் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியும் உள்ளார்.