ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

9-ம் வகுப்பில் முப்பருவ கல்வி முறையை செயல்படுத்துவது குறித்து தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

தமிழகம் முழுவதும் நிகழாண்டு முதல் தொடர் மற்றும் முழுமையான முப்பருவ கல்வி முறையை 9-வது வகுப்பில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதை செயல்படுத்துவதற்கு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:46 am

எஸ். பாண்டியன்

நடப்பு ஆண்டு முதல் 9-ம் வகுப்பில் முப்பருவ கல்விமுறையை செயல்படுத்துவது குறித்து தலைமையாசிரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறை பயிற்சி வருகிற 18-ம் தேதி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட இருக்கிறது.

தமிழகம் முழுவதும் நிகழாண்டு முதல் தொடர் மற்றும் முழுமையான முப்பருவ கல்வி முறையை 9-வது வகுப்பில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதை செயல்படுத்துவதற்கு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்படுகிறது.இதில், விருதுநகர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கு வருகிற 18-ம் தேதி ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. அதேபோல், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கு தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்களுக்கு இந்து மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து நடைபெற இருக்கிறது. எனவே இப்பயிற்சியில் தலைமையாசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் வழிகாட்டு நெறிமுறை பயிற்சியில் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.