நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விபத்துக்களை தடுக்க தீவிர ஆய்வு: ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய வட்டார பகுதி கிராமங்களில் 689 தனியார் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் அரசு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதால் தான் இதுபோன்ற வெடிவிபத்துக்கள் ஏற்பட்டுவருகிறது. இதை

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:46 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் ஆய்வு தீவிரப்படுத்தப்படுவதோடு, தொடர்ந்து வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் டி.என.ஹரிஹரன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய வட்டார பகுதி கிராமங்களில் 689 தனியார் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் அரசு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதால் தான் இதுபோன்ற வெடிவிபத்துக்கள் ஏற்பட்டுவருகிறது. இதை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் இருந்தும் எதிர்பாரதவிதமாக பட்டாசு ஆலையில்  போதுமான பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர பின்பற்றாததால் தான் வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு செப்.5ம் தேதி முதலிப்பட்டி வெடிவிபத்துச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தும், 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து, தனியார் பட்டாசு ஆலை விபத்துக்களில் பல்வேறு துறை அதிகாரிகள் மூலம் ஒவ்வொரு துறை சார்பிலும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அனைத்து ஆலைகளிலும் ஆய்வு செய்தனர்.

அதையடுத்து, நிகழாண்டில் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம், கொங்கணாபுரம் உள்ளிட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தலா 3 பேரும்,  திருத்தங்கல், காரிசேரி, கட்டணார்பட்டி ஆகிய பட்டாசு ஆலை வெடிவிபத்துக்களில் தலா ஒருவரும், விஜயரெங்கையாபுரம் பட்டாசு ஆலை விபத்தில் 2 பேரும், சிவகாசி அருகே பராசக்தி ஆலை விபத்தில் 3 பேரும், அதையடுத்து ஏப்.28-ம் தேதி நடந்த விபத்தில் அதிகமாக 8 பேர் வரையிலும் உயிரிழந்துள்ளனர். எனவே 10 வெடிவிபத்துக்களில் இதுவரையில் 22 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.தற்போது,  சிவகாசி அருகே விளாம்பட்டி தனியார் பட்டாசு ஆலையில் உற்பத்தி செய்வதற்கு மணி மருந்துக் கலவை செய்யும் போது இன்று ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தும், 13 பேர் வரையிலும் காயமும் அடைந்துள்ளனர். இதுபோன்ற வெடிவிபத்துக்கள் ஏற்படுவதற்கு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாத நிலையில் மணி மருந்தைக் கையாளும் போதுதான் வெடிவிபத்துக்கள் இதுவரையில் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கூறுகையில், பெரும்பாலன விபத்துக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றாததுதான் காரணம். இது குறித்து தனியார் பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு பல்வேறு முறை கூட்டம் நடத்தி விதிமுறைகளை பின்பற்றுவது, தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பது  குறித்து விரிவாகவே எடு்த்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட ஆலைகளை தவிர்த்து மற்ற ஆலைகளில் பின்பற்றாத நிலையே தான் நீடித்து வருகிறது. எனவே பட்டாசு ஆலைகளில் வெடி விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டாயம் தடுக்கப்பட வேண்டும.பெரும்பாலன விபத்துக்கள் காற்று, கடும் வெய்யில் அடிக்கும் நேரங்களில் மணி மருந்து கலவை தயார் செய்யும் போதுதான் வெடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதுவரையில் நடந்த விபத்துக்கள் எந்த நேரத்தில் எப்படி நடந்துள்ளது குறித்து ஆய்வு செய்யப்படும். இனிமேல் மருந்துக் கலவை தயார் செய்யும் போது கட்டாயம் தொழிற்சாலை மேற்பார்வையாளர் இருக்க வேண்டும்.

இதற்காக மீண்டும் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர், தொழிற்சாலை ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் குழு அமைத்து ஒவ்வொரு ஆலையிலும் பாதுகாப்பு விதிமுறைகள் என்னென்ன உள்ளதோ அதை அனைத்தையும் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்த ஆய்வு தீவிரப்படுத்தப்படும். மேலும், வாரந்தோறும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணிக்கப்படும். கடந்த 28-ம் தேதி முதல் மறுபடியும் ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதுவரையில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றாத 8 தனியார் பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.