அதையடுத்து, என்னைப் பற்றிய முழு விவரங்களையும் குறிப்பிட்டும், போலீஸார் என்னைப்பிடித்துக் கொள்ள சார்பு ஆய்வாளர் பார்த்திபன் லத்தியால் எனது உடல் பகுதியில் பல்வேறு இடங்களில் தாக்கினார். மேலும், மாநில தலைவர் கோபால்ஜியிடம் தொடர்பு கொள்ளுமாறு கூறினேன், அதற்கு மறுத்த நிலையில் அவரையும் கண்டபடி பேசினார். பின்னர் என்னிடம் இருந்த ரொக்கத்தையும், கைபேசியையும் எடுத்துக் கொண்டு கைவிலங்கு போட்டு மறுபடியும் தாக்கினார்.இதையடுத்து, எங்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தகவல் தெரிந்து காவல் துறை துணைக் கண்காணிப்பாளரிடம் விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையிலேயே என்னை காயத்துடன் விடுவித்தனர். பின்னர் வலி தாங்க முடியாமல் விருதுநகர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால், காவல் துறை விதிமுறைகளை மீறி விசாரணைக்கு அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக தாக்கிய சார்பு ஆய்வாளர் பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேசனுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.