இது குறித்து பனை பொருள் வியாபாரி தங்கரத்தினம் என்பவர் கூறுகையில், இப்பகுதியில் கடும் வெயில் அடித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் நொங்கு மற்றும் பதநீர் உள்ளிட்டவைகளையே விரும்பி அருந்துகிறார்கள். சொந்தமாக பனை வைத்திருப்பவர்கள் இப்பொருள்களை குறைத்து விற்பனை செய்கின்றனர். அதேபோல், ஓண்டிப்புலிநாயக்கனூர், தாதம்பட்டி, ஓடைப்பட்டி, முத்துலாபுரம், சாத்தூர், இருக்கன்குடி, பாலவநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் குத்தகை எடுத்தவர்களிடம் இருந்துதான் பதநீர் மற்றும் நொங்குகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். மேலும், கடினமான வெயிலையும் சாமளித்து வியாபாரம் செய்தால் ஒரு நாளைக்கு போட்ட முதலுடன் கூலியாக ரூ.400 முதல் 500 வரையில் கிடைக்கும். அதிலும், கத்திரி வெயில் காலத்தில் மட்டும் பனைப் பொருள்கள் அதிகமாக விற்பனையாகும் எனவும் தெரிவித்தார்.