டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ராமதாஸுக்கு ஜாமீன் வழங்கியது விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து பாமக தலைவர் ராமதாஸுக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:35 am

சா. ஜெயப்பிரகாஷ்

விழுப்புரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து பாமக தலைவர் ராமதாஸுக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமதாஸ் மீது விழுப்புரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராமதாஸ் சார்பில்  ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், இந்த வழக்கின் விசாரணைக்கு காவல் துறை தரப்பில் விசாரணை அதிகாரி ராமநாதன் ஆஜராகவில்லை. அவர் முக்கிய வழக்குக்காக உயர் நீதிமன்றத்துக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் காவல் துறை சார்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் பதில்மனு தாக்கல் செய்ய அரை மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஆயினும் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கேட்டனர். ஆனால் நீதிபதி கால அவகாசம் தரவில்லை. 

இதனால் ராமதாஸ், ஜி.கேமணி, எம்.எல்.ஏ கணேஷ் குமார் உள்பட பாமகவினர் 463 பேருக்கு ஒரு நபர்  ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.

விழுப்புரத்தில் போடப்பட்ட வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவரைக் கைது செய்ய உத்தரவு பெற்றிருப்பதால், தற்போதைக்கு ராமதாஸ் சிறையிலிருந்து வெளி வரஇயலாது என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.