நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

செக் மோசடி வழக்கில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்: சமரசம் பேசித் தவிர்த்தார்!

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு நாமக்கல்  நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெங்கடாச்சலம் என்பவரிடம் நிலம் தருவதாக 2 லட்சம் வாங்கினாராம்

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:03 am

தமிழ்ச்செல்வன்

செக் மோசடி வழக்கு ஒன்றில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு நாமக்கல்  நீதிமன்றம் சென்ற மாதம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.

வெங்கடாச்சலம் என்பவரிடம் நிலம் தருவதாக ரூ.2 லட்சம் வாங்கினாராம் பவர்ஸ்டார் சீனிவாசன். ஆனால் அவருக்கு நிலம் எதுவும்  கொடுக்காமல் தாமதித்துள்ளார். இதனால் வெங்கடாச்சலம் பணத்தை திரும்பக் கேட்ட போது அவர் ஒரு செக்கை கொடுத்தார். ஆனால் இந்த செக் பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து நாமக்கல் குற்றவியல் முதன்மை  நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, சீனிவாசனை கைது செய்யுமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். கடந்த மாதமே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும், அவரைக் கைது செய்யும் நடவடிக்கை தாமதமானது. இந்நிலையில், செக் மோசடி வழக்கு என்பதால், பவர் ஸ்டார் சீனிவாசன் சமரசம் பேச விரும்பினாராம். இதை அடுத்து சமரசப் பேச்சுக்கு வெங்கடாசலம் முன்வந்ததாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.