கடலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாலின விகிதம் குறித்து மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ் துறை கூடுதல் செயலர் ரிஷிகேஷ்பாண்டே, கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் அண்மையில் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் பெண் சிசு, கருக்கொலையை தவிர்ப்பது பெண் குழந்தைகளை பாதுகாத்தல், பாலின விவரம் குறித்த பயிலரங்கம் கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற்றது. இதில் கூடுதல் செயலர் ரிஷிகேஷ் பாண்டே ஊராட்சியின் செயல்பாடுகள், அங்கன்வாடி மையத்தில் கண்காணிப்பு குழு அமைப்பதன் அவசியம், மகளிர் சபை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி பேசினார்.