சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

புதுவை-திருப்பதி ரயிலை மறித்து புதுவை பல்கலை மாணவர்கள் போராட்டம்

புதுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி - திருப்பதி ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 9:36 am

சா. ஜெயப்பிரகாஷ்

புதுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி - திருப்பதி ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடந்த இந்த போராட்டத்தால், மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 2 மணிக்கு தாமதமாகப் புறப்பட்டது.

ரயில் மறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், அப்பகுதிக்கு காவல்துறையினர் வந்ததும், மறியலை கைவிட்டு அந்த ரயிலில் ஏறிக் கொண்டனர். ரயில் புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே ஆழியூர் என்ற இடத்தில் வயக்காட்டுப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, மாணவர்கள் ரயிலின் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தினர். பிறகு ரயிலில் இருந்து இறங்கி, ரயிலின் முன்பு வந்து அமர்ந்து மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி சாலை வசதிகள் இல்லாத பகுதி என்பதால், தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், காவல்துறை வாகனம் மூலமாக அப்பகுதியை நெருங்க முடியாமல், வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.