நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வன்கொடுமை சட்டத்தில் இளைஞருக்கு 7 மாதம் சிறை

கடலூர் அருகே புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பானு (27). திருச்சோபுரம் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:42 am

VASUDEVAN.K

பெண்களை ஜாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 7 மாதம் சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடலூர் அருகே புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பானு (27). திருச்சோபுரம் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பானு, கீதா, வசந்தா உள்ளிட்ட 3 பேர் விறகு எடுத்து சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த குமரவேல்(25). பானுவை ஜாதி பெயரை சொல்லி திட்டியதோடு கத்தியை காட்டி மிரட்டி தங்க செயினை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.  இதில் குமரவேலுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 7 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தராபதி உத்தரவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.