சேலத்தை அடுத்த மாசிநாயக்கன்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் அடியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் லாரி ஓட்டுநர் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாசிநாயக்கன்பட்டியில் சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் பாலத்தின் கீழே கழுத்தை அறுத்து பகுதியளவு எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற அம்மாப்பேட்டை காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்டவர் கந்தாஸ்ரமம், கோம்பைக்காடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் (45) என்பது தெரிய வந்துள்ளது. இருசக்கர வாகனங்களை பழுது பார்த்து வந்த அவர், லாரி ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி நவமணி (35), அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நவமணிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்றுள்ளது. நவமணியின் பள்ளிக்குச் சென்று நாராயணன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் நாராயணன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நவமணியிடம் அம்மாப்பேட்டை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே நாராயணனை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யும் வரையிலும் அவரது சடலத்தை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த காவல்துறையினர் சடலத்தை கொடுத்து அனுப்பி வைத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

