தூததுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(28). இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் நர்சிங் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனை வளாகம் எதிரே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி வேலைக்குச் சென்று வருகிறார். இந்நிலையில் இரண்டு நாள்களாக பணிக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்து அறையில் தங்கியிருந்தாராம். மேலும், ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியே உணவு அருந்தி விட்டு அறைக்குள் சென்றாராம். அதையடுத்து, இன்று காலை முதல் வெளியில் நடமாட்டம் இல்லாத காரணத்தால் தங்கும் விடுதியைச் சேர்ந்தவர்கள் பிற்பகலில் அறைப்பக்கம் செனறு கதவு ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அப்போது, உள்ளே உத்தரத்தில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்தது.