மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மதுரை புறநகர் பணிமனை கிளையின் அரசு பேருந்து 45 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இப்பேருந்தை ஓட்டுநர் சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்நிலையில், பேருந்து சூலக்கரையை அடுத்து சாலையோர உணவு விடுதியைக் கடந்து செல்லும் போது தாறுமாறக ஓடி ஓரமாக வந்த பசுமாடு மீது மோதினார். இதி்ல், பசுமாடு படுகாயம் அடைந்தது. இது தொடர்பாக பயணிகள் அருகில் சென்று ஒழுங்காக ஓட்டும் படி கூறியுள்ளனர். அப்போது, அவர் குடிபோதையிலும், வாய் நிறைய பான்பராக்கும் உட்கொண்டிருந்தது தெரியவந்தது.