வறட்சி நிவாரணம் வழங்காத கூட்டுறவு அலுவலர்களை தாக்கிய விவசாயிகள் மீது புகார்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அருணாச்சலாபுரம் கிராமத்தில் கூட்டுறவு விவசாய கடன் சங்க விவகார எல்கைக்கு உள்பட்ட கிராமங்களில் வறட்சி நிவாரணம் பெறாதவர்களுக்கு இன்று


திருச்சுழி அருகே வறட்சி நிவாரணம் வழங்காத ஆத்திரத்தில் கூட்டுறவு விவசாய வங்கி அலுவலர்களை விவசாயிகள் தாக்கியதில் காயம் அடைந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அருணாச்சலாபுரம் கிராமத்தில் கூட்டுறவு விவசாய கடன் சங்க விவகார எல்கைக்கு உள்பட்ட கிராமங்களில் வறட்சி நிவாரணம் பெறாதவர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. இதில், சலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(46), கணேசன்(45) மற்றும் குமாரவேல்(45) ஆகியோர் வறட்சி நிவாரணம் பெறுவதற்காக வங்கிக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் சிட்டா அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கிராம நிர்வாக அலுவலர் சான்றோடு மற்றும் கூட்டுறவு வங்கி செயலாளர் போஸை அணுகியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த மறவர் பெருங்குடியைச் சேர்ந்த விற்பனையாளர் பழனிவேல்ராஜன், காசாளர் செல்வம் மற்றும் செயலாளர் போஸ் ஆகியோர் ஆவணங்களை வாங்கி சரிபார்த்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது குறித்து சுட்டிக் காட்டினார்கள். இதனால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தகாத வார்த்தை பேசியுள்ளனர். இதையடுத்து, அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், விற்பனையாளர் பழனிவேல்ராஜனை கையால் கண்ணைக்குத்தி, அறைந்ததில் காயம் அடைந்தார். அதேபோல், மற்ற அலுவலர்களை கைகளால் தாக்கியும் உள்ளனர். இதில், விவசாயிகள் குமரேசன் கணேசன் ஆகியோரும் காயம் அடைந்தனர்.
எனவே இது தொடர்பாக எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் விற்பனையாளர் பழனிவேல்ராஜன் தரப்பிலும், விவசாயிகள் தரப்பில் குமரேசனும் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...