டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாமில் முறைகேடு செய்வதாக கூறி ஆசிரியர்கள் புறக்கணிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாமில் காலிப் பணியிடங்களை காட்டமால் முறைகேடு செய்வதாக கூறி

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:53 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாமில் காலிப்பணியிடங்களை காட்டமால் முறைகேடு செய்வதாக கூறி ஆசிரியர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு, அப்பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளின் நலன் கருதி ஒவ்வொரு பள்ளிக்கும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்  நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 5 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 45 முதுகலை பட்டதாரி ஆசிரியர்  காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கான கலந்தாய்வு முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு விருதுநகர் தங்கம்மாள்-பெரியசாமி நாடார் நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இணைய தளவழியாக நடைபெற்றது.

இதில், காலிப்பணியிடங்கள் குறித்து முறையாக தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு சில பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்கள் என 17 காலிப்பணியிடங்கள் குறிப்பிட்டிருந்தனர். அதிலும், இயற்பியல், பொருளாதாரம் போன்ற பாடங்களுக்கான பணியிடங்கள் குறிப்பிடவில்லை. இதனால், கலந்தாய்வு முகாமில் பங்கேற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைத்து இடங்களையும் உடனே காட்ட வேண்டும் எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு புறக்கணி்ப்பு செய்தனர்.

அதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) அமுதவள்ளி வந்து முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களை சமதானம் செய்து 12 மணிக்கு கலந்தாய்வு முகாம் நடைபெற்றது. அப்போது, 30 பணியிடங்கள் வரையில் இணையதள வழியிலும், தகவல் பலகையிலும் குறிப்பிட்டனர். பின்னர் அமைதியான முறையில் நடத்தப்பட்டது. இதுபோல் வருங்காலத்தில் இணைய தள வழியாக நடத்தினாலும், முறையாக தகவல் பலகையில் காலிப்பணியிட விவரங்கள் அனைத்தும் குறிப்பிடப்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.