தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அண்ணாத்துரை வரவேற்புரை வழங்கினார். மாநில துணைத்தலைவர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட தலைமையிடச் செயலாளர்


விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று(வியாழக்கிழமை)மாலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அண்ணாத்துரை வரவேற்புரை வழங்கினார். மாநில துணைத்தலைவர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட தலைமையிடச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.போத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் மற்றும் முதுகலைப்பட்டதாரி பணியிடங்களுக்கு மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடனே நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தன் பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு செலுத்தும் தொகைக்குரிய வருடாந்திர கணக்குத்தாள் வழங்க வேண்டும்.
2009-ம் ஆண்டிறகு பின் பதவியேற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு நியமனம் செய்யப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் உதயசூரியன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...