சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வனத்துறை அலுவலர் வீட்டில் ரூ.30 லட்சம் வைத்திருந்த சம்பவம் குறித்து விசாரணை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்தில் பாதுகாவலராக இருந்து வருபவர் வேலுச்சாமி. இவர் சரகத்திற்கு உள்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேடி வரும்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:50 pm

எஸ். பாண்டியன்

வனத்துறை பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் ரூ.30 லட்சத்தை வீட்டில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அலுவலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்தில் பாதுகாவலராக இருந்து வருபவர் வேலுச்சாமி. இவர் சரகத்திற்கு உள்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேடி வரும் விலங்குகளுக்கு தாற்காலிக நீர் தொட்டி அமைத்தல் மற்றும் வனப்பகுதிகளில் நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குறிப்பிட்டவைகளை மேற்கொள்வதற்காக ரூ.50 ஆயிரம் முதல் கூடுதலாக ரூ.1 லட்சம் வரையில் ஒப்பந்தகாரர்கள் மூலம் பணிகளை குறிப்பிட்ட நாள்களில் செய்து முடிக்க வேண்டும். அதற்காக, கோட்ட வனச்சரக அலுவலகத்திலிருந்து இவரிடம் ரூ.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இப்பணத்தை வேலை முடிந்தவுடன் ஒப்பநதகாரர்களுக்கு உடனே பட்டுவாடா செய்ய வேண்டும். இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்காமல் அப்பணத்தை தனது வீட்டில் வைத்துள்ளார். இது தொடர்பாக ரகசிய தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.சியமாளா தலைமையில் போலீஸார் சோதனை செய்து பணத்தை கைப்பற்றினார்கள். அப்போது, போலீஸாரிடம் வனத்துறை அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பில்லாத காரணத்தினால் தான் கையிருப்பாக பணத்தை வைத்திருந்ததாகவும், அதற்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்ததால் திரும்ப பணத்தை கொடுத்துள்ளனர்.இதையடுத்து, இக்குறிப்பிட்ட பணத்திற்கு எந்தெந்த பணிகள் என்பது குறித்தும், திட்ட மதிப்பீடு மற்றும் ஒப்பந்தகாரர்கள் விவரத்தை அளிக்குமாறு போலீஸார் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக கோட்ட வனச்சரக அலுவலக அதிகாரி ஒருவர் கூறியாதவது: மலைப்பகுதி அடிவாரத்தில் அவசர பணிகள் மேற்கொள்வதற்கு வனத்துறை அலுவலகம் மூலம் பணம் ஒதுக்கீடு செய்யப்படும். இப்பணத்தை தனது மேற்பார்வையில் வைத்திருந்து பணிகள் முடிந்தவுடன் உடனே ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கி தொழிலாளர்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும். ஆனால், என்ன காரணத்திற்காக குறிப்பிட்ட நாள்களுக்குள் வழங்காமல் தனது வீட்டில் வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து அலுவலக ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து மண்டல வனபாதுகாவலருக்கு நடவடிக்கைக்கு  அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.