சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட விவசாய தொழிற்சங்கத்தினர் 1474 பேர் கைது

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டார செயலாளர் மதுரை வீரன் தலைமைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், ஒவ்வொரு குடும்ப

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:49 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டார செயலாளர் மதுரை வீரன் தலைமைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் 30 கிலோ அரிசி வழங்கவும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் பென்சனும் மற்றும் தேசிய ஊரக திட்டத்தில் பணி செய்து வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஒரு நாள் கூலியாக ரூ.300 வழங்கவும் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பெண்கள் உள்பட 150 பேரை விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.இதேபோல், சிவகாசியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டார செயலாளர் கூடலிங்கம் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உள்பட 90 பேர் கைது செய்தனர்.

மேலும், காரியாபட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வட்டார செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 8 பெண்கள் உள்பட 44 பேரும், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தின் வட்டார செயலாளர் வரதராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 60 பெண்கள் உள்பட 220 பேரும், சாத்தூரில் வெள்ளைக்கரை சாலை சந்திப்பில் வட்டார செயலாளர் சாமிநாதன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் உள்பட 66 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 81 பெண்கள் உள்பட 510 பேரும்,

வத்திராயிருப்பு வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிற்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ராமர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 85 பெண்கள் உள்பட 200 பேரும், எம்.ரெட்டியபட்டியில் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் குருசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தி்ல் 54 பெண்கள் உள்ளிட்ட 124 பேரும் மற்றும் ஆலங்குளம் தமிழ்நாடு அரசு சிமின்ட தொழிற்சாலை முக்குரோட்டில் ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் 20 பேரும் என மொத்தம்  365 பெண்கள் உள்பட 1474 பேரை போலீஸார் கைது செய்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.