சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகர் அருகே வயது குறைந்த பெண்களின் திருமணம் தடுத்து நிறுத்தம்

விருதுநகர் அருகே உள்ளது எலிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளங்கோ-ராஜாக்கனி தம்பதியரின் மூத்த மகன் பழனிமுருகன்(23). இவர் விருதுநகரில் மரக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பேரையூர்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:47 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வயது குறைந்த பெண்களுக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் அருகே உள்ளது எலிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளங்கோ-ராஜாக்கனி தம்பதியரின் மூத்த மகன் பழனிமுருகன்(23). இவர் விருதுநகரில் மரக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பேரையூர் அருகே சந்தையூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்-குருவம்மாள் தம்பதியரின் மகளான பாண்டீஸ்வரி(15) என்பவருக்கும், இளைய மகன் சண்முகநாதன்(21)தேநீர் கடையில் வேலைபார்த்து வருகிறவருக்கு வடமலைக்குறிச்சியைச் சேர்ந்த இளங்கோ-சுந்தரம்மாள் தம்பதயரின் மகள் கனிப்பாண்டியையும்(14) பெரியோர்களால் நிச்சயம் செய்யபட்டு இன்று 10.30-12.30 மணிக்குள் முகூர்த்தம் நடைபெறுவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இருவீட்டார்களும் மும்முரமாக செய்து வந்தனர்.

திருமண நிகழ்ச்சிக்காக பெண் வீட்டார்கள் தங்கள் உறவினர்கள் புடைசூழ மணமகன் வீட்டிற்கு சனிக்கிழமை இரவே வந்து தங்கினர். இந்த நிலையில் அக்கிராமத்தில் இருந்து வயது குறைந்த பெண்களுக்கு திருமணம் நடக்கப் போவதாக இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் உடனே ஆமத்தூர் காவல் நிலையத்திற்கும், சமுக நலத்துறைக்கும் தகவல் தெரிவித்தார். அதையடுத்து, எலிங்கநாயக்கன்பட்டிக்கு  சமூக நலத்துறை அலுவலர் சோலையம்மா மற்றும் ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் ஆகியோர் விரைந்து சென்றனர்.

அங்கு இருவீட்டார்களும் அவர்கள் முறைப்படி முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அதிகாரிகள் இருவீட்டாரைச் சேர்ந்தவர்களையும் அழைத்தனர். அவர்கள் சான்றிதழ்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்டன. அதில், மணப்பெண்கள் இருவருக்கும் குறைந்த வயதாகவே இருந்தது. இதையடுத்து, வயது குறைந்த பெண்களுக்கு அரசு விதிமுறைப்படி திருமணம் செய்து வைக்கவே கூடாது என்பது குறித்து மணப்பெண்கள் வீட்டாருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அதற்கு அவர்கள் திருணத்திற்காக உறவினர்கள் அனைவரும் வந்துள்ளதாகவும், அவர்களுக்கான விருந்தும் தயராகி உள்ளது. இந்நிலையில் திருமணத்தை தடுத்து நிறுத்தினால் கிராமங்களில் கண்டபடி பேசுவார்கள் என்றனர். அதோடு, இருவீட்டாருக்கும் ஆலோசனைகளை அதிகாரிகள் வழங்கினர். அதையடுத்து குறிப்பிட்ட வயது வந்தவுடன் திருமணத்தை நடத்திக் கொள்வதாக எழுதி வாங்கிக் கொண்டனர். சகோதரர்கள் மற்றும் மணமகள்கள் ஆகியோர் விபரீத முடிவு எடுத்து விடாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக நலத்துறை சார்பில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.