சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:46 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பணிக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

இந்த மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு 5 ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் பயனடைய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினருக்கு 40 வயதிற்குள்ளும் இருக்கவும் வேண்டும். அதோடு, நாள்தோறும் கல்லூரி சென்று வருவராகவோ, பணிபுரிந்து வருகிறவராகவும் மற்றும் சுயதொழில் செய்கிறவராகவும் இருக்கக் கூடாது.

மேலும், இதில் பயன் பெற விரும்புவோர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே இத்தொகை வழங்கப்பட இருக்கிறது. அதற்கு, ஒவ்வொருவரும் தேசிய வங்கிக் கிளை ஒன்றில் கணக்கு தொடங்கியிருக்க வேண்டும். இதில், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.100ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150ம், பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மாதந்தோறும் ரூ.200ம், பட்டப்படிப்பு பதிவு செய்தவர்களுக்கு ரூ.300ம் என உதவி தொகை வழங்கப்பட இருக்கிறது.

அதேபோல், இத்திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் கட்டாயம் தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பது அவசியம் ஆகும். இவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து ஓராண்டுக்குள் இருந்தால் போதுமானாது. இதில், எஸ்.எஸ்.எல்.சி மற்றும் அதற்கும் குறைந்த வகுப்பு பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.300ம், பிளஸ்2 தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு ரூ.375ம், பட்டப்படிப்பு பதிவு செய்தவர்களுக்கு ரூ.450ம் என உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையை பெறுவதற்கு வருமான உச்சவரம்பு எதுவும் கிடையாது.

இத்தொகை காலாண்டு தோறும் கணக்கு சரிபார்த்து, நேரடியாக அவரவர் வங்கிக் கணக்குகளின் மூலம் விடுவிக்கப்பட இருக்கிறது. இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விண்ணப்பங்கள் விலையி்ல்லாமல் விநியோகம் செய்யப்படுகிறது. அதைப் பெற்று பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாள்களுக்குள் நேரில் அளிக்கலாம். எனவே இத்திட்டம் நடைமுறையில் இருந்து வருவதால், ஏற்கனவே இத்தொகை பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பம் தேவையில்லை. அதோடு, நிகழாண்டிற்கான சுய உறுதி மொழி ஆவணம் சமர்பிக்காத வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விரைவில் அளிக்கும்மாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.