சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அனைத்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்: பாஜக

இந்திய அரசு சச்சார் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு உதவித் தொகையை கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.சமூகத்தில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:46 pm

எஸ். பாண்டியன்

அனைத்து இந்து ஏழை மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  பா.ஜ.க சார்பில் ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து பா.ஜ.கவின் மாவட்ட செயலாளர் கே.பி.சங்கர் ஆட்சியரிடம் இன்று நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

இந்திய அரசு சச்சார் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு உதவித் தொகையை கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.சமூகத்தில் பின்தங்கியுள்ள மாணவ, மாணவிகள் தடையின்றி தொடர்ந்து கல்வி கற்பதற்காகவே உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம், சமூக புறச்சூழல்கள் இது போன்ற காரணங்களால் எந்த விதத்திலும் கல்வி பாதித்து விடக்கூடாது. அதேபோல், சலுகைகளும் அனைத்து சமூக ஏற்ற தாழ்வுகளின் படியே இருக்க வேண்டும் என அம்பேத்கார் இயற்றிய இந்திய அடிப்படை அரசியல் சட்டத்தை புறக்கணித்து, மத்தின் அடிப்படையில் சலுகை காட்டும் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் நாட்டின் மதசார்பற்ற தன்மைக்கு எதிரானதாகவே உள்ளது.

கள்ளம் கபடமற்ற மாணவ, மாணவிகளின் மத்தியில் மதத்தின் அடிப்படையில் பாகுபாட்டை பள்ளி பருவத்திலிருந்தே புகுத்துவது நாட்டின் ஒருமைப்பாட்டையே சீர்குலைக்கும். பாஜக இளைஞரணியின் கோட்பாடு சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கக் கூடாது என்பது மட்டுமல்ல. அது கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அதேவேளையில் இதுவரையில் வஞ்சிக்கப்பட்டு உதவித் தொகை மறுக்கப்பட்டு வரும் அனைத்து பிரிவுகளையும் சார்ந்த ஏழை இந்து மாணர்களுக்கும் பாரபட்சமில்லாமல் இத்தொகை வழங்கப்பட வேண்டும்.அதில், தேவையான மாற்றங்களை உருவாக்கி சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை, அதே விதிமுறைகளோடு இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை ஜூலை 20-ம் தேதிக்குள் இக்கல்வியாண்டிலேயே வழங்க வேண்டும். குறிப்பிட்ட நாளுக்குள் நிறைவேற்ற விட்டால் ஆகஸ்டு மாதம் 2-ம் தேதி பா.ஜ.க இளைஞரணியின் சார்பில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் நேரில் அளித்த மனுவில் பா.ஜ.வின் மாவட்ட செயலாளர் கே.பி.சேகர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.