இந்நிலையில், விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரசு போக்குவரத்து பணிமனை அருகே தனியார் அரங்கத்திலும், முகூர்த்தம் மற்றும் தாலி கட்டும் வைபவம் சுப்பிரமணியர் திருக்கோயிலும் வைத்து இன்று நடைபெறுவதாக இருந்தது. அதற்காக இருவீட்டாரை சேர்ந்த உறவினர்கள் அனைவரும் திருமணத்திற்கு முதல் நாள் இரவே வந்து தங்கியிருந்தனர்.அதையடுத்து காலையில் சுப்பிரமணியர் திருக்கோயில் வளாகத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டார்களும் மும்முரமாக செய்து கொண்டிருந்தனர். அப்போது, மணமகள் பேசிய நகையை அணியாமல், கவரிங் அணிந்து வந்தது குறித்து பிரச்னை ஏற்பட்டது. அப்போது மணமகன் வீட்டார் உடனே நகை மற்றும் பணத்தை எடுத்து வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.