ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சேலம் மத்திய சிறையில் செல்பேசிகள், ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல்

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் உள்ளிட்ட சுமார் 800 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் கடந்த சில ஆண்டுகளாகவே செல்பேசி, கஞ்சா உள்ளிட்ட

Updated On :3 ஜூலை 2013, 1:27 pm

சேலம் மத்திய சிறையில் சிறைத்துறை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இதில் கைதிகள் சட்ட விரோதமாக மறைத்து வைத்திருந்த செல்பேசிகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் உள்ளிட்ட சுமார் 800 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் கடந்த சில ஆண்டுகளாகவே செல்பேசி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக புகார் கூறப்பட்டு வருகிறது. அவ்வப்போது நடத்தப்படும் சோதனைகளில் ஏராளமான செல்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும் கைதிகளுக்கு கஞ்சா கடத்திச் சென்றதாக சிறைக் காவலர்களும் பிடிபட்டு தண்டனைக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மத்திய சிறையில் செல்பேசி நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக சிறைத்துறை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதையடுத்து துணை கண்காணிப்பாளர் ஹரி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு, புதன்கிழமை காலை 6 மணியளவில் மத்திய சிறைக்குள் அதிரடியாக நுழைந்து ஒவ்வொரு தொகுதியாக சோதனை நடத்தினர். காலை 8.45 மணி வரையிலும் சோதனை நடைபெற்றது.இதில் கைதிகள் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 3 செல்பேசிகள், 6 சிகரெட் லைட்டர்கள், 5 செல்பேசி பேட்டரிகள், 3 கைதிகள் வைத்திருந்த ரூ.2,500 உள்ளிட்டவை பிடிபட்டன. சிறைக்குள் கைதிகளுக்கு செல்பேசி உள்ளிட்ட பொருள்கள் எப்படி கிடைத்தன, அவர்களுக்கு சிறைக் காவலர்கள் உதவி செய்தனரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.நீதிமன்றத்தில் இருந்து வரும் கைதிகள் மூன்றடுக்கு சோதனைக்கு பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதே போலவே சிறைப் பணியாளர்களுக்கும் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும் ஒவ்வொரு முறையும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சிறைக் கண்காணிப்பாளர்கள் சேலம் மத்திய சிறையில் சோதனை நடத்தும்போதும் செல்பேசிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்படுவது வழக்கமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.