/

மாமதுரை போற்றுவோம்: போக்குவரத்து நெரிசலால் மக்கள் பெரும் சிரமம்

மதுரையில் மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சிகள் இன்று துவங்கியுள்ளன. இது வரும் பிப்.10ம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:21 am

ஜெயப்பாண்டி

மதுரையில் மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சிகள் இன்று துவங்கியுள்ளன. இது வரும் பிப்.10ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ஜோதி ஓட்டம் பேரணி ஆகியவை நடைபெற்றன. இன்று காலை கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியால் அரசு பொது மருத்துவமனை முன்னுள்ள சாலை பெரிதும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. மேலும், அரசு பொதுமருத்துவமனையிலும் மருத்துவர்களுக்கான கருத்தரங்கு நடைபெறுவதால், கருத்தரங்குக்கு வந்திருந்த மருத்துவர்கள் பெரும்பாலானோர் சாலையிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்திச் சென்றனர். மருத்துவமனையில் இருந்து உள்ளே செல்லக்கூடிய மற்றும் வெளியே வரக்கூடிய இரு பாதைகளின் முன்னும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், 8க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சாலையில் நெரிசலில் சிக்கித் தவித்தன. நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். அவசரகால சிகிச்சைக்கு வந்த ஆம்புலன்ஸ்களுக்கு வழி கிடைக்காமல் திண்டாடின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.