ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நாமக்கல்: மோகனூரில் மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

மோகனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவ்வாறு குவாரி அமைக்கும்பட்சத்தில் காட்டுப்புத்தூர் வாய்க்காலுக்கு தண்ணீர் கிடைப்பதில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:27 pm

தமிழ்ச்செல்வன்

மோகனூர் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவ்வாறு குவாரி அமைக்கும்பட்சத்தில் காட்டுப்புத்தூர் வாய்க்காலுக்கு தண்ணீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவரி ஆற்றிலிருந்து திருச்சி மாவட்டம் நத்தம் பகுதி வரை செல்லும் காட்டுப்புத்தூர் வாய்க்கால் மூலம் சுமார் 25000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதியில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள் ஆகிய பயிர்கள் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகின்றன. காவிரி ஆற்றைவிட இந்த வாய்க்கால் மேட்டுப்பகுதியாக இருப்பதால் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேர்ந்திட ஒருவந்தூர் கிராமத்திலிருந்து மோகனூர் ரயில்வே பாலம் வரையில் காவிரி ஆற்றில் கொரம்பு அமைத்து தண்ணீர் தேக்கி காட்டுப்புத்தூர் வாய்க்காலுக்கு விடப்படுகிறது.

இந்நிலையில், மோகனூர் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைத்திட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்ககாக கொரம்பின் குறுக்கே பாதை அமைக்க 20 சிமெண்ட் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மணல் குவாரி அமைப்பதற்கான பணிகள் வேகமாக செய்யப்பட்டு வருவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, காட்டுப்புத்தூர் விவசாயிகள் சங்க செயலர் கே.எஸ்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் தொட்டியம் வட்ட விவசாயிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

காவிரி ஆற்றின் கொரம்பு அமைத்தால் மட்டுமே காட்டுப்புத்தூர் வாய்க்காலில் தண்ணீர் சீராக செல்ல முடியும். இந்நிலையில், கெரம்பின் குறுக்கே தடை ஏற்படுத்தி மணல் எடுக்கப்பட்டால் வாயக்காலுக்கு சீராக தண்ணீர் கிடைப்பதில் தடை ஏற்படும். இதன் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டு பாலைவனமாகும் நிலை உருவாகும். அத்துடன், இப்பகுதியிலுள்ள குடிநீரேற்று நிலையங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீர் திட்டங்கள் செயலற்றுப் போகும் நிலைமையும் ஏற்படக்கூடும்.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் வகையில் மோகனூர் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள இந்த மணல் குவாரியை தடை செய்து காட்டுப்புத்தூர் வாய்க்காலில் தண்ணீர் தடையின்றி விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இக்கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.