தென்காசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை
தென்காசியை அடுத்த மேலகரம் பாரதிநகரில் வசிப்பவர் வெங்கடேஷ் (44). இவர் கத்தார் நாட்டின் கெமிக்கல் இஞ்சினியரிங் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.


நெல்லை மாவட்டம் தென்காசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
தென்காசியை அடுத்த மேலகரம் பாரதிநகரில் வசிப்பவர் வெங்கடேஷ் (44). இவர் கத்தார் நாட்டின் கெமிக்கல் இஞ்சினியரிங் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் ஊருக்கு வந்திருந்த அவர், வீட்டைப் பூட்டிவிட்டு, கொடைக்கானல், ஊட்டி சென்றார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ. 19 ஆயிரம் மதிப்புள்ள கத்தார் ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்ஸிகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...