பூட்டியிருந்த வீட்டில் 6 சவரன் நகை திருட்டு
விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டில் ஓட்டை பிரித்து இறங்கி 6 சவரன் நகை, வெள்ளிக் கொலுசு மற்றும் ரொக்கம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து


விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டில் ஓட்டை பிரித்து இறங்கி 6 சவரன் நகை, வெள்ளிக் கொலுசு மற்றும் ரொக்கம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
விருதுநகர் அருகே எத்திலப்பன்பட்டியைச் சேர்ந்த ஐயர்அப்பன்(50). இவரது தந்தையார் உயிரிழந்த துக்கத்திற்காக இலுப்பையூர் அருகே வேலாயூரனி கிராமத்திற்கு குடும்பத்துடன் கடந்த 1ம் தேதி சென்றார்களாம். இந்நிலையில் பக்கத்து வீட்டு பெண் வாசல் தண்ணீர் தெளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது, அவர் ஓடுகள் பிரிக்கப்பட்டிருப்பதை பார்த்து அவரது கணவர் பழனிவேலுவிடம் தெரிவித்துள்ளார். பின்னர் தூரத்தில் இருந்து பார்த்து விட்டு இது தொடர்பாக வெளியூரில் இருப்பவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் செவ்வாய்கிழமை காலையில் விரைந்து வந்து வீட்டை திறந்து பீரோவை பார்த்துள்ளனர்.
அப்போது, யாரோ அடையாளம் மர்ம நபர்கள் ஓட்டை பிரித்து இறங்கி பீரோவில் இருந்து 6 சவரன் நகை, வெள்ளிக் கொலுசு மற்றும் ரொக்கம் ரூ.2 ஆயிரம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றிருந்தனர். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் ஐயர்அப்பன் புகார் அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஓட்டை பிரித்து வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...