டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பூட்டிய வீட்டின் மாடி வழியாக புகுந்து 19 சவரன் நகை திருட்டு

விருதுநகர் அருகே வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் மாடி வழியாக வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 19 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:07 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் மாடி வழியாக வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 19 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவரின் மனைவி செல்வக்கனி(50). இவர், தையல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு வெளியூரில் இருக்கும் தனது மகன் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வீட்டை பூட்டி விட்டு சென்றாராம். இதையடுத்து தனது சொந்த ஊருக்கு திங்கள்கிழமை திரும்பினார். பின்னர் வீட்டை திறந்து உள்ளே நுழைந்துள்ளார், அப்போது பொருள்கள் சிதறியும், பீரோவும் திறந்து இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின் பீரோவை பார்க்கையில் அதிலிருந்த 19 சரவன் நகைகளை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவு உள்ளிட்ட இடங்களில் ரேகை பதிவு செய்தனர். எனவே இது குறித்து செல்வக்கனி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.