விருதுநகரில் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாத இளைஞர் மாற்றுத்திறனாளி அடையாள கேட்டு தனது தாயுடன் அலைந்து வருகிறார்.
விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்த அழகம்மாள் என்பவரின் மகன் சண்முகவேல்(29). இவரது தாய் கணவரால் கைவிடப்பட்டவர் ஆவார். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் துப்புரவு தொழிலாளியாக வேலைபார்த்து, அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.எனவே சண்முகவேலுக்கு வயதுக்கேற்ப வளர்ச்சியில்லாமலும், உடல் அமைப்பு குறைபாடுடன் 7 வயதுக்குறிய வளர்ச்சியுடன் இருந்து வருவதால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு உதவித் தொகை பெற மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வேண்டி மாவட்ட சமூக நலத்துறை அலுவலரிடம் மனுக் கொடுத்தார். ஆனால், அங்கு சோதனை செய்யப்பட்ட நிலையிலும், குள்ளமாக இருந்தாலும் உதவித் தொகை பெறமுடியாது என்றும், நன்றாக இருப்பதாக கூறியும் திருப்பி அனுப்பிவிட்டனர்.
இது குறித்து சண்முகவேல் கூறியதாவது: என்னால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகிறேன். எனது தாயார் வேலை செய்து வரும் குறைந்த வருமானத்தில் தான் எனது தங்கையோடு வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல மாதங்களாக தாமதம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்திருந்தேன். அந்த மனு மறுபடியும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு பரிசீலனைக்கு வந்ததுள்ளதாக கூறி அழைத்தனர். அதையடுத்து, எனது தாயருடன் சென்ற நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு எழுதிக் கொடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் மாற்று திறனாளி அடையாள அட்டை வழங்க முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பி அலைகழிப்பு செய்து வருவதாக சண்முகவேல் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருவெறும்பூரில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை போட்டி

நெல்லை புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை! ஆட்சியா் தகவல்

நடிகா் என்ற பிம்பத்தை வைத்து விஜய் ஆட்சியைப் பிடிக்க முடியாது! - எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலா்
3.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

