டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வாகன விபத்தில் 4 வயது பெண்மான் சாவு

விருதுநகர் அருகே மருளூத்துக்கும்-பட்டம்புதூருக்கும் இடையில் உள்ள பகுதிகளில் மான்கள் இரை மற்றும் தண்ணீர் தேடி விவசாய தோட்டங்களுக்குச் செல்வது வழக்கமாகும். அதேபோல், இன்று

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:05 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது பெண் மான் வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிரிழந்தது.

விருதுநகர் அருகே மருளூத்துக்கும்-பட்டம்புதூருக்கும் இடையில் உள்ள பகுதிகளில் மான்கள் இரை மற்றும் தண்ணீர் தேடி விவசாய தோட்டங்களுக்குச் செல்வது வழக்கமாகும். அதேபோல், இன்று காலையில் கண்மாய் பகுதியிலிருந்து வெளியேறி இரை தேடி காட்டுப் பகுதிக்கு செல்வதற்காக 4 வழிச்சாலையை கடந்து செல்லும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து தலை சிதறி உயிரிழந்தது.

இதை அப்பகுதியில் வாகனச் சோதனை மேற்கொள்வதற்கு வாகனத்தில் சென்ற போலீஸார் பார்த்துள்ளனர். அதையடுத்து, இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த வனத்துறையினர் பெண்மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாகனத்தில் எடுத்துச் சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.